தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: காவலரை பிடித்து ஒப்படைத்த பொதுமக்கள்!

news18
Updated: June 26, 2019, 10:51 AM IST
தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: காவலரை பிடித்து ஒப்படைத்த பொதுமக்கள்!
மாதிரி படம்
news18
Updated: June 26, 2019, 10:51 AM IST
தெலங்கானா மாநிலம் நிர்மல் பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணை பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி லாட்ஜ்க்கு அழைத்துச் சென்ற காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் கடம்பப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜோதி, நிர்மலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், பணி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு நிர்மல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

ஆனால் கடம்ப்பிற்கு செல்லக் கூடிய கடைசி பேருந்து சென்றுவிட்டதால் செய்வதறியாமல் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்திருந்தார். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் அந்தப் பெண்ணை ஈவ்டீசிங் செய்துள்ளனர்.

இதனை கவனித்த அங்கிருந்த குற்றப்பிரிவு காவலர் கங்காதர், ஜோதியை இரவு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதாகக் கூறி கங்காதர் தமது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு லாட்ஜில் அறை எடுத்துள்ளார்.

இதனை கவனித்த உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஊழியர்கள் பின்னால் தொடர்ந்து சென்று பார்த்தபோது அவர் அந்தப் பெண்ணை ஒரு அறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.

இதையடுத்து, பொதுமக்களே நேரடியாக அந்த அறைக்குச் சென்று கையும் களவுமாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்.பி.சசிதர் ராஜு, காவலர் கங்காதரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Also see...

First published: June 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...