• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அரசு மருத்துவமனையில் நோயாளி சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

அரசு மருத்துவமனையில் நோயாளி சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

மருத்துவ கண்காணிப்பாளர் அறைக்கு, சிறுமியை அழைத்துச் சென்று ஒரு ஊசி போட்டுள்ளனர். பின்னர், ஒரு மாத்திரையும் கொடுத்துள்ளனர். அதன்பிறகு, சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை எடுக்க வந்த 17 வயது சிறுமியை, மயக்க மருந்து கொடுத்து இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதசே மாநிலம் ஆக்ராவிலுள்ள காசநோய்கான அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 23-ம் தேதி காசநோயால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வெள்ளிக்கிழமை இரவுப் பணியில் இருந்த வார்டு பாய் சிவநந்தன், இரவு 11.30 மணி அளவில் சிறுமியிடம் ஊசி போட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பின்னர், இந்த தளத்தில் ஊசி இல்லை என்று கூறி, சிறுமியை தரைத்தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தச் சிறுமி அவரது அம்மாவை எழுப்ப முயற்சிபோது, அவரை எழுப்ப வேண்டாம் என்று சிவநந்தன் கூறியுள்ளார். தரைத்தளத்துக்கு போகும்போது விஷால் என்பவரும் உடன் இணைந்துள்ளார். மருத்துவ கண்காணிப்பாளர் அறைக்கு, சிறுமியை அழைத்துச் சென்று ஒரு ஊசி போட்டுள்ளனர். பின்னர், ஒரு மாத்திரையும் கொடுத்துள்ளனர். அதன்பிறகு, சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

    அதன்பின்னர், மயக்கம் தெளிந்து எழுந்த பின்னர்தான், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளோம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிவநந்தனும், விஷாலும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: