• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் திருத்தம் : 1.5 கோடி பேர் பலனடைவர்

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் திருத்தம் : 1.5 கோடி பேர் பலனடைவர்

பணம் - மாதிரிப்படம்

பணம் - மாதிரிப்படம்

பணித்திறன், பணியாற்றும் பகுதி ஆகியவை அடிப்படையில் 4 விதமான ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    மத்திய அரசு துறைகளில் சாலை பராமரிப்பு பணி உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட பணிகளில் ஈடுபடும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இதில் பணித்திறன், பணியாற்றும் பகுதி ஆகியவை அடிப்படையில் 4 விதமான ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன இதனால் 1.5 கோடி தொழிலாளர்கள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு துறைகளில் கட்டுமான பணி, சாலை பராமரிப்பு பணி, விமான நிலைய ஓடுதள பராமரிப்பு போன்ற பட்டியலிடப்பட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் திருத்தி அமைத்து வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி, அக்டோபர் 1ஆம் தேதி என 2 முறை மாற்றி அமைக்கப்படுகிறது.

    தொழிற்சாலை ஊழியர்களுக்கான சராசரி நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில், அக்டோபர் 1ஆம் தேதிக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது. இம்மாதம் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு இது அமலுக்கு வருகிறது.

    பணித்திறன், பணியாற்றும் பகுதி ஆகியவை அடிப்படையில், 4 விதமான ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள 1.5 கோடி தொழிலாளர்கள் பலனடைவார்கள் என்றும், கொரோனா காலத்தில் அவர்களுக்கு இது நிவாரணமாக அமையும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Must Read : School Holiday | கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

    ரயில்வே நிர்வாகம், சுரங்கம், எண்ணெய் வயல்கள், பெரும் துறைமுகங்கள், மத்திய அரசின் கார்ப்பரேஷன்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: