Home /News /national /

திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்! - வைரலான வீடியோவால் காவல்துறை நடவடிக்கை

திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்! - வைரலான வீடியோவால் காவல்துறை நடவடிக்கை

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

டெல்லியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நபர் வானத்தை நோக்கி காற்றில் துப்பாக்கி சூடு நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய நபரின் மீது கைது நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வீடியோக்கள் குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது அதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் அந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தற்போது டெல்லியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நபர் வானத்தை நோக்கி காற்றில் துப்பாக்கி சூடு நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய நபரின் மீது கைது நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

    வீடியோவில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் பார்ட்டி உடைகளை அணிந்து நாற்காலியில் அமர்ந்துள்ளார். துப்பாக்கியை தனது கைகளை உயர்த்தியபடி தலைக்கு மேலே பிடித்து மற்றொரு நபரை வீடியோ எடுக்க சொல்கிறார். பின்னர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது அதிக அளவில் பகிரப்பட்டது.

    டெல்லியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பேசும்போது, ``வீடியோவின் வழியாக அடையாளம் காணப்பட்ட அந்த நபரின் பெயர் ஆஷிஷ். இவர் லோக்கல் கிரிமினல் ஆவார். திருமண நிகழ்ச்சியின் போது சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அவர் தனது உறவினரின் திருமணத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளனர்.

    காவல்துறை அதிகாரிகள் தற்போது அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளியிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Ram Sankar
    First published:

    Tags: Delhi, Gun fire

    அடுத்த செய்தி