Home /News /national /

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாய்மாமன்.. தப்பித்த சிறுமி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாய்மாமன்.. தப்பித்த சிறுமி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்

சிறுமி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்

சிறுமி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்

சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சிறுமியின் தாய்மாமன் நாகராஜ், மது அருந்தி வந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nellore, India
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிறுமி வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயன்ற தாய் மாமனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள குஜகுஜத் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ராஜகோபால், ரத்னம்மா தம்பதியினரின் 14 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் பணி நிமித்தம் காரணமாக வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய்மாமன் நாகராஜ், மது அருந்தி வந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கழிவறைக்கு சென்று கதவை மூட முயன்றபோது, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற நாகராஜ், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்ததோடு மட்டுமின்றி, அங்கிருந்த ஆசிட்டை எடுத்து சிறுமி வாயில் ஊற்றியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பத்தினர், சிறுமியை மீட்க முயற்சித்த போது, சிறுமிக்கு உதவுவது போல் நாகராஜ் நாடகமாடியுள்ளார்.

    ALSO READ | திருப்பூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காலவர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது...

    ஆசிட் ஊற்றியது நாகராஜ் தான் என சிறுமி தனது கை சைகை மூலம் காண்பித்ததையடுத்து, நாகராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தொடர்ந்து சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்து விட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் நாகராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

     

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Acid attack, Crime News, Nellore S01p22, Rape

    அடுத்த செய்தி