பிறந்தநாள் விழாவில் பங்கேற்க மறுத்த நண்பனை கார் ஏற்றி கொன்ற இளைஞர் - ஆந்திராவில் பரபரப்பு

மாதிரிப்படம்.

ஆந்திரப் பிரதேசத்தில் தன் வீட்டு பிறந்தநாள் விழாவுக்கு வருவதற்கு மறுத்த நண்பனை கார் ஏற்றி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் காக்கிநாடா ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் ரமேஷ் மது அருந்தி கொண்டிருந்தபோது அவாது மற்றொரு நண்பரான சின்னா என்பவர் ரமேஷை தொடர்பு கொண்டு தமது வீட்டில் நடைபெறும் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ரமேஷ் நண்பர்களுடன் மது விருந்தில் கலந்து கொண்டிருப்பதால் வர இயலாது என்று கூறியதுடன் சின்னாவையும் மது விருந்திற்கு அழைத்துள்ளார்.

  பின்னர் ரமேஷ் நண்பர்களுடன் இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு கிளம்பும் போது சின்னா ரமேசை மீண்டும் பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என்று நேரில் வந்து அழைப்பு விடுத்தார். அவர் வர மறுக்கவே சின்னா தனது காரில் ஏறி ரமேஷ் மீது மோதி கீழே தள்ளி மூன்று முறை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். உடனிருந்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த ரமேசை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

  அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து சின்னாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: