ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற சங்கர்ராவ் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் காதலில் இருந்து வந்தார். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த காதலின் போது அந்த பெண் சங்கர் ராவிடம் இருந்து ஏராளமான அளவில் பணம், நகைகள், ஆடைகள் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கர்ராவுடன் அந்த பெண் பேசுவதை தவிர்த்து வந்தார். சங்கர்ராவ் பலமுறை முயற்சித்தும் அந்தப் பெண் அவருடன் பேசவில்லை. இறுதியாக உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று அந்த பெண் சங்கர்ராவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சங்கர்ராவ் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் இணைத்து வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை ஏற்படுத்தினார். பின்னர் தன்னை அந்த பெண் ஏமாற்றி பணம், நகைகள் ஆகியவற்றை வாங்கி சென்றது பற்றி விபரத்தை வாட்ஸ் அப்பில் பதிவு செய்த சங்கர்ராவ், அந்த பெண் செய்த மோசடி காரணமாக வேதனை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.