ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரமிக்கவைக்கும் களிமண் 'ரெஸ்டாரண்ட்' - கட்டிட கலை நிபுணர்களின் பலே ஐடியா..

பிரமிக்கவைக்கும் களிமண் 'ரெஸ்டாரண்ட்' - கட்டிட கலை நிபுணர்களின் பலே ஐடியா..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மிலன் பிரஜாபதி என்பவர் களி மண் மற்றும் மறுசுழற்சி பொருட்களை மட்டுமே பயன்படுத்தி புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை கட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மிலன் பிரஜாபதி என்பவர் களி மண் மற்றும் மறுசுழற்சி பொருட்களை மட்டுமே பயன்படுத்தி புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை கட்டியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மிலன் பிரஜாபதி என்பவர் களி மண் மற்றும் மறுசுழற்சி பொருட்களை மட்டுமே பயன்படுத்தி புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை கட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அகமதாபாத்தில் களிமண் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டப்பட்ட புதிய ரெஸ்டாரண்ட், சூப்பரான லுக்குடன் காண்போரை வியக்கவைக்கிறது. பூமியில் அதிகரித்து வரும் கழிவுப் பொருட்களின் தேக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்கிறது. மறு சுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் மக்களிடையே, அந்த கருத்துக்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாக தெரியவில்லை. இருப்பினும், ஒரு சிலர் எடுக்கும் முயற்சி, நாமும் அதைப்போல் செய்ய வேண்டும் என ஆசையை தூண்டுவதாக அமைந்துவிடுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மிலன் பிரஜாபதி என்பவர் களி மண் மற்றும் மறுசுழற்சி பொருட்களை மட்டுமே பயன்படுத்தி புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை கட்டியுள்ளார். பரம்பரை பரம்பரையாக பானைத் தொழில் செய்து வரும் அவரது குடும்பத்தில் 5-வது தலைமுறையாக மிலன் பிரஜாபதி அந்த தொழிலை செய்து வருகிறார். கும்கார் (Kumhar) என்ற தன்னுடைய பரம்பரையையும், பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை பயன்படுத்தி ஒரு ரெஸ்டாரண்ட் அமைக்க வேண்டும் என மிலன் பிரஜாபதி நினைத்துள்ளார். அதற்காக அப்பகுதியில் இருந்த 'தி கிரிட் ஆர்க்கிடெக்ஸ்' நிறுவனத்தை அணுகியுள்ளார்.

அவர்களும் மிலன் பிரஜாபதியின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப களிமண், மஞ்சள், பயன்படுத்தப்பட்ட சணல் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு சூப்பரான, பட்ஜெட்டுக்கு உகந்த ரெஸ்டாரண்டை அமைத்து கொடுத்துள்ளனர். மிலன் பிரஜாபதி குயவர் என்பதால், ரெஸ்டாரண்ட் முகப்பில் குயவரின் சக்கரம் இடம்பெற்றுள்ளது. ரெஸ்டாரண்டுக்கு தேவையான களிமண் மற்றும் மட்பாண்டங்களை மிலன் பிராஜாபதியே வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய தி கிரிட் ஆர்கிடெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிநேகல்,"மிலன் பிரஜாபதியின் விருப்பதுக்கு ஏற்ப இந்தக் கட்டடத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளோம். கட்டடம் முழுவதும் இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களை மட்டுமே பயன்படுத்தி அழகாக வடிவமைத்துள்ளோம். வண்ணம் கூட கெமிக்கல் பொருட்கள் இல்லாத மஞ்சள் உள்ளிட்ட இயற்கை பொருட்களின் மூலம் உருவாக்கி ரெஸ்டாரண்டுக்கு தீட்டியுள்ளோம். 

குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டமிடுமாறு மிலன் கூறியதால், 50 விழுக்காடு செலவுகளை குறைத்து, உயர்தரத்தில் கட்டத்தை அமைத்துக்கொடுத்துள்ளோம். கட்டடத்தின் அழகு வேலைப்பாடுகளுக்கு, மிலன் பிரஜாபதியிடம் இருக்கும் கைதேர்ந்த குயவர்களை பயன்படுத்திக்கொண்டோம். ரெஸ்டாரண்டின் அமைப்பு உண்மையிலேயே மிகச்சிறப்பாக வந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடமாகவும் இருக்கிறது" எனக் கூறினார்.  

கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்த பத்ரி பேசும்போது, களி மண்ணை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தியுள்ளோம். பூக்களை உருவாக்குவதற்கு தேவையான கலவைகளை கெசுடோ மரத்தில் இருந்தும், மஞ்சளில் இருந்தும் உருவாக்கிகொண்டோம்" என கூறினார். மேலும், சணல் பொருட்கள், மறு சுழற்சி செய்யப்பட்ட மரப்பொருட்கள், சுடப்படாத களிமண் பொருட்களை கொண்டு விளக்கு உள்ளிட்டவற்றை அழகு படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். தற்காலத்துக்கு ஏற்ற வடிவிலும், பாரம்பரியத்தின் கலைநயம் சிறிதும் குறையாமலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்ட் காண்போரை வியக்க வைப்பதுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

First published:

Tags: Ahmedabad, Clay, Restaurant