• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லி குண்டு வெடிப்பு ஒரு டிரெய்லர் தான்... சம்பவ இடத்தில் கிடைத்த கடிதத்தில் தகவல்

டெல்லி குண்டு வெடிப்பு ஒரு டிரெய்லர் தான்... சம்பவ இடத்தில் கிடைத்த கடிதத்தில் தகவல்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே, இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஈரானை சேர்ந்தவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில், வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றியதாகவும், அதில், இந்த குண்டு வெடிப்பு ஒரு டிரெய்லர் மட்டுமே என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே, இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உயர்ரக வேதிப்பொருள் அடங்கிய வெடிகுண்டை, அல்கொய்தா அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இருக்கக்கூடும் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மல்கா கூறியுள்ளார

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: