Home /News /national /

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த பக்தர்கள்

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த பக்தர்கள்

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

திருப்பதி கோவில் (கோப்புப்படம்)

இலவச தரிசன டோக்கன்களையும் தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது உள்ளூர் மக்களின் கருத்தாக உள்ளது.

  • News18
  • Last Updated :
    திருப்பதியில் மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் டோக்கன் வாங்குவதற்காக இன்று ஏராளமான பக்தர்கள்  குவிந்தனர்.

    பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க தேவையான டோக்கன்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்ட கவுண்டர்களில் வினியோகம் செய்கிறது.

    நாளொன்றிற்கு மூன்றாயிரம் என்ற அடிப்படையில் காலை 7 மணிக்குத் துவங்கி டோக்கன்கள் தீர்ந்து போகும் வரை கடந்த சில நாட்களாக இலவச தரிசன டோக்கன் வினியோகம் நடைபெறுகிறது.

    ஒரு மாதத்திற்கு முன்னர் இதேபோல் நாளொன்றுக்கு 3 ஆயிரம் என்ற அடிப்படையில் இலவச தரிசன டோக்கன் வழங்கபட்டபோது மூன்றாயிரம் டோக்கன்களை வாங்குவதற்கு ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    மேலும் மறுநாள் காலை ஏழு மணிக்கு கவுண்ட்டர்கள் திறக்கப்பட இயக்குனர்களில் முதல் நாள் இரவே திருப்பதிக்கு வந்து கவுண்டர்களில் காத்திருந்தனர்.

    இதனால் கொரோனா வேகமாக பரவ வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் தற்காலிகமாக அப்போது ரத்து செய்தது.

    தற்போது மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் டோக்கன் வாங்குவதற்காக இன்று ஏராளமான பக்தர்கள் கவுண்டரில் குவிந்தனர்.

    இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா பரவலுக்கு எதிரான அனைத்து நடைமுறைகளும் காற்றில் பறந்து கொண்டுள்ளன.
    300 ரூபாய் டிக்கெட் மூலம் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை வழிபட தற்போது வாய்ப்புகள் உள்ளன.

    Also read... ராயலசீமா நீர்ப்பாசன திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அவசியம்.. பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு..



    எனவே ஏழுமலையானை தரிசிக்க ஆர்வமாக இருக்கும் பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலவச தரிசன டோக்கன்கள் வாங்க பல்லாயிரக்கணக்கில் திருப்பதிக்கு வந்து சேர்கின்றனர்.
    ஆனால் அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே தினமும் இலவச தரிசனம் டோக்கன்கள் கிடைக்கின்றன.மற்றவர்கள் எவ்விதமான வாய்ப்பும் இல்லாத காரணத்தால் ஊர் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இலவச தரிசன டோக்கன்களையும் தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது உள்ளூர் மக்களின் கருத்தாக உள்ளது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupati Devotees

    அடுத்த செய்தி