Home /News /national /

உத்தராகண்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி

உத்தராகண்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட்

பள்ளத்தாக்கில் பல அடிக்கு கீழே பேருந்து உருண்ட நிலையில் பக்தர்கள் 25 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

    உத்தராகண்டில் ஆன்மீக சுற்றுலா சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்திலிருந்து பேருந்தில் உத்தராகண்டிற்கு யாத்திரீகர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றனர். பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவிட்டு உத்தரகாசியை அடைந்த பேருந்து டம்டா எனும் மலைபாங்கான இடத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பல அடிக்கு கீழே பேருந்து உருண்ட நிலையில் பக்தர்கள் 25 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ஆறு பேரின் சடலங்களை மீட்டனர். எஞ்சிய சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து தெரியவந்ததும் உடனடியாக உத்தராகண்ட் புறப்பட்டுச் சென்ற மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

     
    Published by:Ramprasath H
    First published:

    அடுத்த செய்தி