திருவிழா என்றாலே அனைத்து ஊர்களும் கலைக்கட்டுவது வழக்கம். ஒவ்வொரு ஊர் திருவிழாவிலும் அந்த ஊருக்கும் தெய்வத்திற்குமான சில தனிப்பட்ட வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள் இருப்பது உண்டு. அந்த வகையில் ஏனாம் பகுதியில் நடைப்பெற்ற திருவிழாவில் பல கோலாகலமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது.
புதுச்சேரியின் ஏனாம் பகுதி ஆந்திர மாநில காக்கிநாடா-கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது.33 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஏனாமின் பரப்பளவு 30 சதுர கி.மீ. தூரம்.புதுச்சேரியின் பகுதியாக இருந்தாலும் தமிழ் பேசுபவர்கள் மிக குறைவு. தெலுங்கு பேசும் மக்களே அதிகம்.இந்த மொத்த பகுதிக்கும் ஒரே அம்மன் கோயிலாக ஸ்ரீபோலரம்மன்,ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டிற்கு ஒருமுறை "ஜாத்ரா மகோற்சவம்" நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் பூ கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.அப்போது கெட்ட சக்திகளை விரட்டும் வகையில் பூசாரியும் பக்தரும் கரகத்தை மாறி மாறி இழுப்பார்கள்.இதனை மற்ற பக்தர்கள் பார்த்து வழிபட்டனர்.இதில் சிலர் பக்திபரவசத்தில் சாமி பிடித்து ஆடினார்கள்.
அதே வேளையில் பாரம்பரிய நடனமான "கரக நாட்டியம்" இவ்விழாவின் முக்கிய அம்சம்.ஆண்கள் மட்டுமே ஆட கூடிய இந்த நடனத்திற்கு விரதம் இருந்து இரு தீப்பந்தத்திற்கு இடையே தலையை காட்டி தீக்கு நடுவில் ஓடி சென்று நடமாட வேண்டும்.அப்படி செய்து பல ஆண்களும் அம்மனுக்கான பாரம்பரி ய நடனமாடினார்கள்.உலக நன்மை வேண்டியும் கொரோனா போன்ற நோயில் இருந்து மக்களை காக்க வேண்டியும் இவ்வாண்டு ஸ்ரீபோலரம்மன்,ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு"ஜாத்ரா மகோற்சவம்" நடத்தப்படுவதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.