ஹோம் /நியூஸ் /இந்தியா /

இரட்டைக் குழந்தைகளுடன் முதன்முறையாக மும்பை வீட்டிற்கு வந்த இஷா அம்பானிக்கு உற்சாக வரவேற்பு

இரட்டைக் குழந்தைகளுடன் முதன்முறையாக மும்பை வீட்டிற்கு வந்த இஷா அம்பானிக்கு உற்சாக வரவேற்பு

இஷா அம்பானி

இஷா அம்பானி

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகள் இஷா அம்பானி, இரட்டை குழந்தைகளுடன் மும்பை வீட்டிற்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மகளான இஷா அம்பானி தனது இரட்டை குழந்தைகளுடன் இன்று (டிசம்பர் 24) தனது மும்பை வீட்டிற்கு முதல்முறையாக வந்தார். அப்போது அவருக்கு அம்பானி குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியுடன், இஷாவின் சகோதரர்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அம்பானி இருவரும் அங்கு வந்திருந்தனர்.

இஷா அம்பானி நவம்பர் 19 ஆம் தேதியன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.  அதில் ஒரு பையனும், பெண்ணும் உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, இஷா அம்பானி முதல் முறையாக தனது இரு குழந்தைகளுடன் மும்பை வந்தடைந்தார். இந்த நேரத்தில் அவருடன் அவரது கணவர் ஆனந்த் பிரமலும் காணப்பட்டார். அவரை வரவேற்க அம்பானி குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு வந்தனர்.

இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறித்து அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், 'கடவுளின் அருளால் எங்கள் குழந்தைகளான இஷாவும் ஆனந்தும் 19 நவம்பர் 2022 அன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இஷா இரண்டு குழந்தைகளான பெண் குழந்தை ஆதியா மற்றும் ஆண் குழந்தை கிருஷ்ணா இருவரும் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை நாங்கள் விரும்புகிறோம். ஆதியா, கிருஷ்ணா, ஈஷா மற்றும் ஆனந்த் ஆகியோரின் வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்கள் வாழ்த்துக்களையும் எதிர்பார்க்கிறோம் என்றனர்.

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் நாள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தலைவர் முகேஷ் அம்பானியில் மகள் இஷா அம்பானிக்கும், பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல் தலைவர் மகன் ஆனந்த் பிரமல் அவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், அமெரிக்க முதல் பெண்மணியுமான ஹிலாரி கிளிண்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ரத்தன் டாடா, பச்சன் குடும்பத்தினர், ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

First published:

Tags: Isha Ambani