ராஜஸ்தானில் பெண் ஒருவர் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்டுள்ள விநோத திருமணம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரை சேர்ந்தவர் பூஜா சிங் ( வயது 30). அரசியலறிவில் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை எல்லை பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வுபெற்றவர்.
சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் சண்டையிட்டுக்கொள்வதை பார்த்து, திருமண வாழ்க்கைமீது எரிச்சல் ஆகியிருக்கிறார் பூஜா. தானும் அப்படி திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையில் கணவருடன் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை.
இதையும் படிக்க : திருப்பதி: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சை!
தன்னை சுற்றி இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் பூஜாவின் திருமணம் பற்றி அதிகம் கேட்கத்தொடங்கி உள்ளார்கள். பூஜாவிற்கு திருமணம் செய்ய பிடிக்காததால், அவர்களின் தொந்தரவுகளை சமாளிக்கும் வகையில், சிறு வயதிலிருந்து தான் வழிபாடு நடத்திய கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
இப்படிப்பட்ட ஒரு முடிவிற்கு பூஜாவின் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பல நாட்களாக சண்டையிட்டும், பூஜா ஒரே முடிவாக இருந்ததால், இறுதியில் பூஜாவின் தாய் சம்மதம் தெரிவித்தார்.
டிசம்பர் 8ஆம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்து, மணமகன் இல்லாமல் ராஜஸ்தான் மாநிலம் ஹாம்லட்டில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் 300 நபர்கள் கலந்துகொண்டனர். இருப்பினும் பூஜாவின் தந்தை அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
View this post on Instagram
பூஜாவின் தாய் திருமணத்திற்கு வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தார். இந்த திருமணத்திற்கு பூஜாவின் நண்பர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Lord Vishnu, Rajasthan, Viral News