ஹோம் /நியூஸ் /இந்தியா /

பேய் எல்லாம் சமாதிக்குள்ள போய்டும்.. பேய் கண்காட்சி கொண்டாடும் வினோத கிராமம்!

பேய் எல்லாம் சமாதிக்குள்ள போய்டும்.. பேய் கண்காட்சி கொண்டாடும் வினோத கிராமம்!

உத்தர பிரதேச பேய் கண்காட்சி

உத்தர பிரதேச பேய் கண்காட்சி

ஒவ்வொரு ஆண்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேய் கண்காட்சி நடைபெறுகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  விஞ்ஞான வளர்ச்சி ஒரு புறம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்கிறது. மறுபுறம் அரிய நோய்களுக்களுக்கும் எப்படியாவது சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக மருத்துவ அறிவியலும் வளர்ச்சிக் காண்கிறது.

  இதோடு தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டிவரும் சூழலிலும் மூட நம்பிக்கைகள் ஒருபுறம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஆம் என்ன தான் இன்றைக்கு உள்ள மக்களிடம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, ஆடை நாகரிகம் என முன்னேற்றம் கண்டிருந்தாலும், பேய்கள் மீதான அச்சமும், மூட நம்பிக்கையும் குறையவில்லை. இந்த கூற்றை உண்மையாக்குகிறது ஒவ்வொரு ஆண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் பேய் கண்காட்சி.. என்ன தான் இந்த வினோத நிகழ்வில் உள்ளது? என நாமும் இங்கே தெரிந்துக் கொள்வோம்.

  உத்தரப்பிரதேசத்தில் பேய் கண்காட்சி….

  உத்தரப்பிரதேச மாநிலம் மிசாபூர் மாவட்டத்திலிருந்து சுமார் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பர்ஹி என்ற கிராமம். இங்கு சுமார் பல ஆண்டுகளுக்கு முன்னதாக சிவபெருமானின் பக்தரான பாபா பெச்சு என்பவர் பர்ஹி கிராமத்தில் கால்நடைகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஒரு நாள் காட்டில் மாடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது சிங்கம் ஒன்று பாபா பெச்சுவைத் தாக்கியுள்ளது. சிங்கத்திற்கும் இவருக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்றுள்ளது.

  இதையும் படிக்க : பிரபல மருத்துவமனையின் அடியில் 132 வருடப் பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு!

  பலத்த காயங்களுடன் கிராமத்திற்கு வந்த இவர், நடந்தவற்றை விரிவாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் நீங்கள் சண்டையிட்டு சிங்கம் அல்ல என்றும் இறைவனின் அசரிரீ என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தனக்கு இங்கேயே சமாதி கட்டுங்கள் என்றும், பேய் பிடித்தல் உட்பட வாழ்க்கையில் நடக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இங்கே வந்து வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். அன்றைய நாளிலிருந்தே சுமார் 350 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வுளை நடத்தி வருகின்றனர்.

  இதேப் போன்று இந்தாண்டும் பேய் கண்காட்சி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பர்ஹி கிராமத்தில் நடைபெற்றது. இங்கு பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான மக்கள் பாபா பெச்சு பிர்தாமி சமாதிக்கு வருகைத் தருகின்றனர். குறிப்பாக பேய் பிடித்ததாகக் கூறப்படும் மக்கள் இங்கு வந்து வழிபடும் போது அவர்களிடமிருந்த பேய்கள் சமாதிக்குச் சென்று விடுவதாகவும் நம்பப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் இங்கு வந்து வழிபட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதால் இந்த நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர். மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக மூன்று முறை இங்கு வந்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளது.

  உத்தரப்பிரதேச மக்கள் இந்த நிகழ்வுகளை ஒரு போதும் நாங்கள் கைவிட மாட்டோம் என்ற முனைப்போடு உள்ளனர். நக்சல்களால் பாதிக்கப்பட்ட கிராமம் பர்ஹி என்பதாலும் தங்களை இதுவரை பாபா பெர்சு தான் காப்பாற்றி வருகிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவரது மனைவிக்கும் சமாதி கட்டி மக்கள் வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: India, Trending News, Uttar pradesh