நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்! முன்னாள் சிஷ்யை குற்றச்சாட்டு

நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களைக் கொடுமைப்படுத்திகிறார்கள்! முன்னாள் சிஷ்யை குற்றச்சாட்டு
சாரா ஸ்டீபைன் லான்டிரி
  • News18
  • Last Updated: September 22, 2019, 9:45 PM IST
  • Share this:
கர்நாடாக மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனவும் கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷ்யை சாரா என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிஷ்யையாக இருந்தபோது, நடந்த சம்பவங்களை கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி (Sarah Stephanie Landry) என்ற இளம்பெண் சமூகவலைதளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார். ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் நித்யானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்பட அவர் மீதான பல்வேறு புகார்கள் தொடர்பாக சமூகவலைதளத்தில் விரிவாக எழுதிவருகிறார்.

நித்யானந்தாஅண்மையில் சாரா வெளியிட்ட வீடியோவில், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து தன்னை வெளியேறத் தூண்டியது என்ன என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். ஸ்ரீ நித்திய ஸ்வரூப்ப பிரியானந்தா என்ற பெயருடன் பிடதியில் குருகுல ஆச்சார்யாவாக பணியாற்றிய சாரா, குழந்தைகளிடம் தான் நெருங்கிப் பழங்கியதாக தெரிவித்துள்ளார். இரண்டு சிறுவர்கள் அழுதுகொண்டே, நித்யானந்தாவின் செயல்கள் அனைத்தும் பொய் என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் விரிவாக விசாரித்தபோது, ஆசிரமத்தில் உள்ளவர்களால் அடித்து துன்புறுத்தப்படுவதாகவும், சிறை போன்ற அறைகளில் அடைத்து வைக்கப்படுவதாகவும் தெரியவந்ததாக சாரா கூறுகிறார். குருகுல ஆசிரியர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது தான் சிறுவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என்ற கொடுமை அங்கிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டுமென அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதை வெளியே கூறுவது குரு துரோகம் எனவும் ஆசிரியர்கள் மிரட்டிவைத்திருப்பதாக சாரா கூறுகிறார்.

இதுகுறித்த ஆசிரமத்தின் மூத்த நிர்வாகிகளான நித்யானந்தா, ரஞ்சிதாவிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கூறுகிறார். நித்யானந்தாவால் தானும் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்ததாகவும், அவரது உண்மை முகம் தெரிந்ததால் தாம் கனடா கிளம்பிவந்துவிட்டதாகவும் சாரா தெரிவித்துள்ளார். நித்யானந்தாவின் ஆசிரமத்தில் துன்புறுத்தப்படும் சிறுவர்களைக் காப்பாற்ற வேண்டுமென அந்த வீடியோவில் சாரா கோரிக்கை விடுத்துள்ளார்.திடீரென சாரா இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மதத்தின் மீதான தாக்குதல் என்றும், நித்யானந்தாவின் பெயர், புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் எனவும் நித்யானந்தா ஆசிரமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Also see:

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading