ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலுக்கு எதிர்ப்பு... மகள் தற்கொலை.. ஆத்திரத்தில் காதலனை கொன்று புதைத்த தந்தை - கோர சம்பவம்

காதலுக்கு எதிர்ப்பு... மகள் தற்கொலை.. ஆத்திரத்தில் காதலனை கொன்று புதைத்த தந்தை - கோர சம்பவம்

மகளின் காதலனை கொன்று புதைத்த தந்தை

மகளின் காதலனை கொன்று புதைத்த தந்தை

தற்கொலை செய்து கொண்ட மகளின் காதலனை கொலை செய்து மகளை புதைத்த இடத்தின் அருகிலேயே புதைத்த பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள துருல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண் (24). அவரும் ஜங்காரெட்டிகூடத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரின் மகள் சியாமலாவும் (18) ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது.

  எனவே இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய காதல் பற்றி குடும்பத்தாரிடம் கூறினர். ஆனால் இரண்டு பேரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

  இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் காதலனை  திருமணம் செய்ய முடியாத காரணத்தால் மனவேதனையில் இருந்த சியாமளா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது முதல் அவருடைய தந்தை நாகேஸ்வரராவ் மகளின் மரணத்திற்கு பவன் கல்யாண் காரணம் என்ற கோபத்தில் இருந்து வந்தார்.

  Also Read : அந்தரங்க வீடியோ மிரட்டல்... பாலியல் தொந்தரவு.. மூன்று முடிச்சு சீரியல் நடிகை தற்கொலையில் வெளியான பகீர் தகவல்

  இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி பவன் கல்யாண் நண்பர்கள் அளித்த விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது பற்றி பவன் கல்யாண் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜங்காரட்டி கூடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  அப்போது 15ஆம் தேதி பவன் கல்யாணை நாகேஸ்வர ராவ் அழைத்து சென்றது தெரிய வந்தது. எனவே நாகேஸ்வரராவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாகேஸ்வரராவை அழைத்து சென்று கை ,கால்களை கட்டி கடுமையாக தாக்கி கொலை செய்து அவருடைய உடலை சியாமளாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே புதைத்து விட்டேன் என்று கூறினார்.

  அங்கு சென்ற போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பவன் கல்யாண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Crime News