கேரள மாநிலம் குருவாயூரில் திருமண போட்டோ சூட் கிடையே திடீரென மிரண்ட யானை தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கும் காட்சி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கேரளா மாநிலம் குருவாயூர் கோயிலில் வைத்து நேற்றைய தினம் நிகில், அஞ்சலி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்பு கோவில் வளாகத்துக்குள் வைத்து போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கோவில் சம்பந்தப்பட்ட சடங்குகளுக்காக கோவிலுக்கு சொந்தமான தாமோதர் தாஸ் என்ற யானை கோவிலை நோக்கி அழைத்து சென்றுக்கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க : முதலைய எப்புடி பிடிக்கிறேன் பாரு.. கெத்தாக சென்று கடி வாங்கிய முதியவர் - பதறவைக்கும் வீடியோ
எதிர்பாராதவிதமாக திடீரென மிரண்ட யானை தன்னுடன் நடந்து வந்த பாகனை நோக்கி திரும்பி தும்பிக்கையால் பாகனை தலைகீழாக தூக்கி உள்ளது. இதில் கீழே விழுந்த பாகன் மற்றும் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருந்த திருமண தம்பதியினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யானையின் மீது இருந்த மற்றொரு பாகனின் துரித நடவடிக்கையால் யானை சிறிது நேரத்தில் அமைதியானது. இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Kerala, Wedding Photoshoots, Wilf animal Elephant