Home /News /national /

மாற்றுத்திறனாளி இளைஞர் போடும் தன்னம்பிக்கை நீச்சல்..10 கி.மீ கடலில் நீந்தி கடந்த சுவாரஸ்யம்!

மாற்றுத்திறனாளி இளைஞர் போடும் தன்னம்பிக்கை நீச்சல்..10 கி.மீ கடலில் நீந்தி கடந்த சுவாரஸ்யம்!

ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்.

ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்.

Chennai | இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி இளைஞர் தன்னம்பிக்கையுடன் பத்து கிலோ மீட்டர் தூரம் தொலைவை கடலில் நீந்தி கடந்தார்.

    மனித வாழ்க்கையில் திறமை உள்ள அனைவருக்கும் அங்கீகாரம் என்பது கிடைத்தே தீரும்.அதையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் அந்த திறமையை உலகிற்கு எடுத்து காட்டுவது என்பது அவசியமாகவும். அப்படி தன்னம்பிக்கையால் அனைவரும் ஆச்சர்யபடும் வகையில் ஒருவர் செய்த நிகழ்வு தான் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

    இந்திய தேசிய மாணவர் படையினர் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு 300 கி.மீ தூரம் படகில்  பெருங்கடலில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இப்பயணத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அம்சமாக சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி  இளைஞர் 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி கடந்தார். அவருக்கு துணைநிலை ஆளுநர் மற்றும் இந்திய தேசிய மாணவர் படை அதிகாரிகளும் மாணவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    சென்னையை சேர்ந்த ராஜசேகரன்- வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ். இவர் பிறவியிலேயே கால்கள் செயலிழந்து மூளை வளர்ச்சி குறைபாடு உடன் பிறந்தவர். இதனை ஒரு பின்னடைவாக கருதாமல் அவர்களது பெற்றோர் ஸ்ரீராமுக்கு நீச்சல் பயிற்சியை சிறுவயது முதல் அளித்து வந்தனர். இதன் பயனாக கடந்த ஜூலை மாதம் இவர் கடலூரில் 5 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் நீந்தி கரையை அடைந்தார்.

    Also Read : நள்ளிரவில் விதவை கோலத்தில் பொங்கல் வைத்த சுமங்கலி பெண்கள்.. சேலத்தில் வினோத வழிபாடு


    அடுத்ததாக பத்து கிலோமீட்டர் தொலைவை நீந்திக் கடக்கும் நிகழ்ச்சியை சீனிவாஸ் மேற்கொண்டார். இதனை  பெருமையுடன் கூறும் அவரது தாயார் வனிதா, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் என்சிசி அதிகாரிகளின் ஊக்கத்தினால் தனது மகன் கடலில் நீண்ட தூரம் கடக்க முடிந்ததாக கூறினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் அவர்கள் பயிற்சி பெறுவதற்கு என தனி நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் போன்றவற்றை உருவாக்கித் தர வேண்டும் என வனிதா கோரிக்கை வைக்கிறார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Dr tamilisai soundararajan, Puducherry

    அடுத்த செய்தி