ஹோம் /நியூஸ் /இந்தியா /

சத்திஸ்கரில் 4-வது முறை ஆட்சியமைக்குமா பா.ஜ.க?: வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி எது? - ஒர் அலசல்

சத்திஸ்கரில் 4-வது முறை ஆட்சியமைக்குமா பா.ஜ.க?: வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி எது? - ஒர் அலசல்

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

சத்திஸ்கரில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைப் பெற்றுள்ள பா.ஜ.க தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  சத்திஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் இதர பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களின் வாக்குகளைப் பெறும் கட்சி வெற்றி வாகை சூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  மத்தியப் பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக மூன்று முறை பா.ஜ.க.தான் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் ராமன் சிங் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துவருகிறார். 15 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக முதலமைச்சராக நீடித்து வரும் ராமன் சிங், இந்த முறையும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  அதற்கு முக்கிய காரணம், சத்திஸ்கரிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், இயல்பாகவே பா.ஜ.கவின் அனுதாபிகளாக இருந்துவருகின்றனர். அவர்களுடைய வாக்குகள் தொடர்ச்சியாக பா.ஜ.கவுக்கு இருந்துவருவதால் மூன்று முறை தொடர்ச்சியாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. சத்திஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த அஜித் ஜோகி இந்த முறை தனிக் கட்சித் தொடங்கி பி.எஸ்.பியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.

  அதனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியான தலித் மக்கள் மற்றும் சட்நாமி மக்களின் வாக்குகள் அனைத்தும் சிதறும். தலித் மக்கள் மற்றும் சட்நாமி மக்களின் ஆதிக்கம் நிறைந்த மத்திய மாவட்டங்களான துர்க், பிலைய், ராய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் அஜித் ஜோகி, பி.எஸ்.பி கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமையும் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. சத்திஸ்கரில் இயல்பாக, சட்நாமி மற்றும் இதர பிற்படுத்த வகுப்புகள் எதிர்ரெதிர் துருவங்களில் முக்கிய வாக்கு வங்கிகளாக இருக்கின்றன. சத்திஸ்கர் மாநிலம் உருவானதிலிருந்து மூன்று முறை அஜித் ஜோகி, காங்கிரஸின் முகமாக முன்னிருந்தப்பட்டார்.

  அதனால், ஓ.பி.சி மக்களின் வாக்குவங்கியை தொடர்ச்சியாக பா.ஜ.க தக்கவைத்துக் கொண்டது. இந்த முறை அஜித் ஜோகி தனிக் கட்சி தொடங்கி தனியாகத் தேர்தலை எதிர் கொண்ட நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதகமான கட்சி போல காங்கிரஸ் தன்னை முன்னிறுத்தியது. முக்கிய சாதிகளான குர்மி, சாஹி ஆகிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட இடம் வழங்கியது. சத்திஸ்கரில் இடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் நிலவுடமையாளர்களும் இருந்துவருகின்றனர். அவர்களைக் கவரும் விவசாயக் கடன் தள்ளுபடி, நெல் விளைவிப்பவர்களுக்கு குறைந்தபட்ச உதவித் தொகை ஆகிய திட்டங்களை காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

  இந்த அறிவிப்பு பா.ஜ.கவுக்கு ஆதரவான வாக்குகளை காங்கிரசுக்கு ஆதரவாக மாற்றி அமைக்கும் என்று கணிக்கப்படுகிறது. நாளை வரவுள்ள தேர்தல் முடிவுகள், பட்டியலின மக்களின் வாக்குகள் காங்கிரசுக்கா அல்லது அஜித் ஜோகிக்கா என்பதும், சட்நாமி மக்களின் வாக்கு பா.ஜ.க.வுக்கா? அல்லது காங்கிரசுக்கா? என்பதும் தெரியவரும்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: 5 State Election, Chhattisgarh Election 2018