பிரபலங்களின் பெயர்களில் கடைகள் திறப்பது, போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்குவது என்றிருந்த ரசிகர்கள் தற்போது அடுத்த நிலைக்குச் சென்று புதிதாக சன்னி லியோன் சாப்ஸ் என்றதொரு ஒரு புதிய வகை உணவையே அறிமுகப்படுத்தி உள்ளனர்.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சைவ உணவுகளுக்கு அசைவ உணவுகளின் பெயர்களை வைத்து வியாபாரத்தை பரபரப்பாக்கிய உணவகம் ஒன்று தற்போது புதிய வியாபார உத்தியை கையில் எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமாகி வந்த ஒரு உணவகத்தின் மெனு கார்டு இந்த உணவகத்துக்குப் பெரும் விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளது. அதாவது, அந்த மெனு கார்டில் சன்னி லியோன் சாப்ஸ் என்றதொரு உணவு இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் மியா கலீஃபா சாப்ஸ், பாபி டோல் சாப்ஸ் என்று கூடுதல் ஐட்டங்கள் வேறு வரிசைக் கட்டி நிற்கிறதாம்.
பிரபலங்களின் தனியுரிமை, பதிப்புரிமை என எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளர்களை வளைத்துப் போட்டு வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இது எங்கள் கருத்து சுதந்திரம் என முடித்துவிட்டது அந்த டெல்லி ரெஸ்டாரன்ட் நிர்வாகம்.
மேலும் பார்க்க...அரசு பள்ளியில் பழங்குடி ஆடைகளை அணிந்து வரும் மாணவர்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mia Khalifa, Sunny Leone