• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விதியின் கொடூரமான முடிவு புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது: பிரதமர் மோடி இரங்கல்

விதியின் கொடூரமான முடிவு புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது: பிரதமர் மோடி இரங்கல்

விதியின் கொடூரமான முடிவு புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 46 வயதாகும் அவர், இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

    புனித் ராஜ்குமார் மரணம் கர்நாடகா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு கன்னடத் திரையுலக ரசிகர்கள், திரையுலகினரை மட்டுமல்ல இந்தியத் திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், விதியின் கொடூரமான முடிவு புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக புனித் ராஜ்குமாருடன் எடுத்த புகைப்படுத்துடன் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, விதியின் கொடூரமான முடிவு, திறமையான நடிகர் புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. இது இறப்பதற்கான வயதே அல்ல. அவரது பணியை, அற்புதமான ஆளுமையை வரும் தலைமுறைகள் அன்போடு நினைவுகூர்வார்கள். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: