Home /News /national /

கேரளாவில் 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூர தாய்...

கேரளாவில் 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூர தாய்...

கேரளாவில் 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூரதாய்...

கேரளாவில் 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூரதாய்...

கேரள மாநிலத்தில் தோஷம் நீக்க வேண்டி தனது ஆறுவயது மகனை கை, கால்களை கட்டி நரபலி கொடுத்துள்ளார் ஒரு கொடூர தாய் பள்ளி ஆசிரியரான தாய் கைது செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன?

  ஆந்திரமாநிலம் திருப்பதி அருகே ஒரு பேராசிரியர் தம்பதி தெய்விக சக்தி கிடைக்கும் என்பதற்காக கடந்த மாதம் தங்களது இரண்டு மகள்களை கொடூரமாக அடித்துக் கொன்று நரபலி கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே போன்று ஒரு சம்பவம் கேரள மாநிலத்தில் தற்பொது நடந்துள்ளது ஆறுவயது மகனை பெற்ற தாயே நரபலி கொடுத்துள்ளார்.

  கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சுலைமான். இவரது மனைவி 40 வயதான சபிதா. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் ஏற்கனவே உள்ள நிலையில், சபிதா நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். சுலைமான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், சபிதா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

  இவர்களது மூன்றாவது மகன் 6 வயதான ஆமிலின் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டுள்ளார் சபிதா. தனது மூன்றாவது மகனை கொலை செய்துவிட்டதாகவும், உடல் குளியல் அறையில் கிடப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

  அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சபிதா வீட்டிற்கு சென்று பார்த்த போது, குளியலறையில் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக சடல்தை பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை தொடங்கினர்.

  மகனை கொன்றதாக தெரிவித்த தாய் சபிதாவிடம் விசாரணை நடத்தியதில் பலதிடுக்கிடும் தகவல்களை சொல்லியுள்ளார். சபிதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையிலும், மனநிம்மதி இல்லாமலும் இருந்ததாகவும், அதற்கு தெய்வதோஷம்தான் காரணம் என்று நம்பியுள்ளார்.

  தோஷம் நீங்க அவரது மூன்றாவது மகனை நரபலி கொடுதால் தோஷம் நீங்குவதுடன், மகனும் சிறிது நேரத்தில் உயிரோடு வந்து விடுவதாக கனவு வந்ததாக தெரிவித்துள்ளார். அதனால் அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை கை மற்றும் கால்களை கட்டியுள்ளார். மகன் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்துள்ளார்.

  மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்றவர், சமையலறையில் இருந்த கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

  இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆமிலின் பரிதாபமாக இறந்தார். ஆனால் சிலநிமிடங்களில் மகன் உயிர்பெற்று வருவார் என்று கனவு வந்த நிலையில் பல மணி நேரம் ஆகியும் மகன் உயிரோடு வரவில்லை .

  மேலும் படிக்க...சிவகங்கையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை...

  அப்போதுதான் தனது மகனை கொன்றுவிட்டோமே என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகுதான் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டதாக சபிதா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

   

  சபிதாவை கைது செய்த போலீசார் அவரிடம், அவருக்கு யாராவது நரபலி கொடுக்க வழி நடத்தினார்களா?அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இது போன்று செய்தாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோஷம் நீங்குவதற்காக பெற்ற மகனை, தாயே நரபலி கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Kerala, Narabali

  அடுத்த செய்தி