முகப்பு /செய்தி /இந்தியா / மல்லையா மீது விரைவில் மேலும் ஒரு குற்றப் பத்திரிகை

மல்லையா மீது விரைவில் மேலும் ஒரு குற்றப் பத்திரிகை

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

  • Last Updated :

பொதுத் துறை வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மேலும் ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.டி.பி.ஐ. வங்கியிலிருந்து 900 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2015-ம் ஆண்டு விஜய் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட 17 வங்கிகளிடமிருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு அவர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

top videos

    இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. குற்றப் பத்திரிகையில் கடன் பெற்று கொடுத்த வங்கிகளின் உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Bank fraud, Businessman Vijay Mallya, Criminal case, Kingfisher