ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலைமை செயலாளர் வங்கி கணக்கில் இருந்தே பணம் திருட முயற்சி - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

தலைமை செயலாளர் வங்கி கணக்கில் இருந்தே பணம் திருட முயற்சி - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

பீகார் மாநில தலைமை செயலாளர் அமிர் சுபானி

பீகார் மாநில தலைமை செயலாளர் அமிர் சுபானி

பீகார் மாநில தலைமை செயலாளர் அமிர் சுபானி. இவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 90 ஆயிரத்தை நேற்று முன் தினம் யாரோ திருட முயன்றுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bihar, India

  பீகார் மாநில தலைமை செயலாளரின் வங்கி கணக்கில் இருந்தே பணம் திருட முயற்சி செய்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சைபர் குற்றங்கள் குறித்து செய்திகள் அதிகளவில் வந்துக்கொண்டிருக்கிறது. வங்கிகளும் காவல்துறையும் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் அம்மாநில தலைமை செயலாளரின் வங்கி கணக்கில் இருந்தே மர்மநபர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளனர்.

  பீகார் மாநில தலைமை செயலாளராக இருப்பவர்  அமிர் சுபானி. இவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 90,000 நேற்று முன் தினம் யாரோ திருட முயன்றுள்ளனர். இது குறித்து தெரிய வந்ததும், அவர் மாநில பொருளாதாரம் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.

  அந்த புகாரின் பேரில், அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மோசடி கும்பல் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூடுதல் டி.ஜி.பி. நய்யார் ஹஸ் நைன் கான் தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Bihar, Chief Secretary, Cyber crime