• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கல்லூரி விண்ணப்பத்தில் மதத்துக்குப் பதிலாக மனிதத்தை தேர்ந்தெடுக்கலாம்!

கல்லூரி விண்ணப்பத்தில் மதத்துக்குப் பதிலாக மனிதத்தை தேர்ந்தெடுக்கலாம்!

பெத்தூன் கல்லூரி

பெத்தூன் கல்லூரி

பெத்தூன் கல்லூரி 1879-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் பெண்கள் கல்லூரி ஆகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கல்லூரி விண்ணப்பங்களில் ‘மதம்’ என்ற பிரிவில் ‘மனிதம்’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கல்லூரி நிறுவனம் ஒன்று தனது மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்தியாவில் எந்த்வொரு விண்ணப்பத்திலும் பெயர், பாலினம், பிறந்த தேதி உடன் மதமும் சாதியும் கேட்கப்படுவது வழக்கம். பள்ளி, கல்லூரி விண்ணப்பங்களிலிருந்து அரசு விண்ணப்பங்கள் வரையிலும் மதம் என்ற பிரிவு நிரப்பப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

சமீப காலமாக, சில இடங்களில் விண்ணப்பங்கள் மதம் மற்றும் சாதியை விருப்பமிருந்தால் குறிப்பிடலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், கொல்கத்தாவைச் சேர்ந்த கல்லூரி ஒன்று தனது கல்லூரி விண்ணப்பத்தில் மதம் என்ற பிரிவின் கீழ் ‘மனிதம்’ என்றொரு ஆப்ஷனை இணைத்துள்ளது.

பெத்தூன் கல்லூரி விண்ணப்பம்


எந்தவொரு மத அடையாளமும் வேண்டாம் என நினைக்கும் மாணவர்கள் தங்களது மதமாக மனிதத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இக்கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ளது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பெத்தூன் என்ற கல்லூரி தான் இந்த வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியின் இந்தச் செயலுக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பெத்தூன் கல்லூரி 1879-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் பெண்கள் கல்லூரி ஆகும்.

மேலும் பார்க்க: பட்டம் பெற வேண்டுமென்றால் கட்டாயம் 10 மரங்களை வளர்க்க வேண்டும் என சட்டம் வகுத்த நாடு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: