முகப்பு /செய்தி /இந்தியா / 20 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த 9-ம் வகுப்பு மாணவன்... விசாரணையில் வெளி வந்த அதிர்ச்சி தகவல்கள்

20 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த 9-ம் வகுப்பு மாணவன்... விசாரணையில் வெளி வந்த அதிர்ச்சி தகவல்கள்

காட்சிப்படம்

காட்சிப்படம்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவன் பொக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டான்.

  • 1-MIN READ
  • Last Updated :

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 20க்கும் மேற்பட்ட மாணவிகளைப் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் நகரில் ஒரு தனியார்ப் பள்ளியில் வெளியூரிலிருந்து ஒரு மாணவி புதிதாகச் சேர்ந்துள்ளார். அதே பள்ளியில் சக வகுப்பு மாணவன் ஒருவன் அந்த மாணவியிடம் நட்பு முறையில் நெருங்கிப் பழகி அடிக்கடி வீட்டிற்கும் சென்று வந்துள்ளான். மாணவியின் பெற்றோரிடமும் நல்ல முறையில் பழகுவது போல் காட்டியுள்ளான்.

புதிய பள்ளி என்ற நிலையில் மாணவி சிறிது தயக்கத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவியிடம் போதைப் பொருட்களைக் கொடுத்து இது தயக்கத்தைப் போக்கும் புத்துணர்ச்சி தரும் என்று சொல்லியுள்ளான். மாணவியும் அதனைத் தொடர்ந்து எடுக்க அதற்கு அடிமையாகியுள்ளார். மாணவியைப் போதைப் பொருளுக்கு அடிமையாகி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த மாணவன். மேலும் அதனை வீடியோ பதிவாக வைத்துக்கொண்டு மாணவியைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

Also Read : அரசியல்வாதிகள் அள்ளி வழங்கும் இலவசத் திட்டங்கள்: மிக்ஸி கிரைண்டர்களில் தொடங்கி நிலாவுக்குப் பயணம் வரை..

இந்த செயலை தற்செயலாக மாணவியின் பெற்றோர் அந்த மாணவியின் மொபைல் போனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாணவியைப் போதைப் பொருள் அடிமையிலிருந்து மீட்க வயநாடு போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்துள்ளனர்.

மேலும் மாணவன் மேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவனை காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் மேலும் 20க்கும் மேற்பட்ட பெண்களை மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவனை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைதுசெய்தனர்.

மேலும் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் அந்த மாணவனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதிய காவல்துறை அதற்கான விசாரணை நடத்த உள்ளனர். தற்போது மாணவனின் வழக்கு சிறார் நீதிமன்றத்தில் வந்து மாணவனுக்கு ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைப் பள்ளியிலிருந்து மாணவனைப் பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது.

First published:

Tags: Crime News, POCSO case, Rape case, School boy