Home /News /national /

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகள் கழித்து திரையரங்கம் - வரலாற்று நிகழ்வு என்று லெப்டினன்ட் கவர்னர் புகழாரம்!

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகள் கழித்து திரையரங்கம் - வரலாற்று நிகழ்வு என்று லெப்டினன்ட் கவர்னர் புகழாரம்!

 லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா டிவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா டிவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மற்றும் ஷோபியான் பகுதியில் முப்பது வருடங்கள் கழித்து மக்கள் சினிமா பார்க்கத் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

  • 1 minute read
  • Last Updated :
  • Jammu and Kashmir, India
    இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மற்றும் ஷோபியான் பகுதியில் முப்பது ஆண்டுகள் கழித்து மக்கள் சினிமா பார்க்கத் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கங்களைத் திறந்து வைத்த லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் 1990களில் இருந்து அதிகரித்த ராணுவ மற்றும் தீவிரவாதிகளின் செயல்களின் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டது.  சுமார் 33 ஆண்டுகளாக அந்த பகுதியில் திரையரங்குகள் கிடையாது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டபிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

    தற்போது ஜம்மு பகுதியில் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரையரங்கை ஐநாக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும் அதில் உணவகங்களும் கட்டப்பட்டுள்ளது.



    இது குறித்து இந்த திட்டத்தின் தலைவர் கூறுகையில், வெளியில் கிடைக்கும் அதே வசதியுடன் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த திரையரங்கம் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    Also Read : இரண்டாவது திருமணம் செய்த கணவன் : மின் கம்பியில் கட்டிவைத்து செருப்பால் விளாசிய முதல் மனைவி!

    மூன்று அரங்குகளுடன் நவீன ஓசை கருவிகள் வசதியுடன் சில்வர் திரை, சாய்வு இருக்கைகள் மற்றும் சாதாரண இருக்கைகள் என்று நவீன மாயமாக தற்போது திரையரங்கம் மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Cinema, Jammu and Kashmir

    அடுத்த செய்தி