ஓடிசா-ஆந்திரா எல்லையில் உள்ள சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. மேலும் 8 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றில் முழ்கிய புலம் பெயர் தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் இருந்து வந்து ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடிவு செய்தனர். சாலை மார்க்கமாக செல்ல முடியாது என்பதால் விசாகப்பட்டினத்தில் இருந்து படகில் ஒடிசா செல்ல முடிவு செய்தனர். இதற்காக நேற்றிரவே விசாகப்பட்டினம் வந்த அவர்கள், அங்கு 2 நாட்டுப் படகை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 11 பேர் சில்லேரு நதியில் படகில் பயணம் மேற்கொண்டனர்.
மேலும் படிக்க..புதுக்கோட்டை: பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கும் தொண்டு நிறுவனம்
அப்போது, முதலில் சென்ற படகு நீரில் கவிழ்ந்தது. இதனால் 2-வது படகில் அனைவரும் ஏற முயன்ற நிலையில் அதுவும் கவிழ்ந்தது. இதில் 2 பேர் மட்டும் நீந்திக் கரையேறினர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் ஒரு குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. காணாமல் போன 8 பேரையும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Andhra Pradesh, Boats, Migrant workers