Home /News /national /

கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய ஆற்றுப் பாலத்தில் அபாயகரமாக ஓட்டப்பட்ட பேருந்து!

கேரளாவில் வெள்ளத்தில் மூழ்கிய ஆற்றுப் பாலத்தில் அபாயகரமாக ஓட்டப்பட்ட பேருந்து!

வெள்ளத்தில் ஓட்டப்பட்ட பேருந்து

வெள்ளத்தில் ஓட்டப்பட்ட பேருந்து

kerala : கேரளாவில் பேருந்துக்குள் இருக்கும் பயணிகளின் உயிரையும் பொருட்படுத்தாமல், வெள்ளத்தால் மூழ்கிய ஆற்றுப் பாலத்தில் பேருந்தில் இருந்த பயணிகளின் பேச்சையும் கேட்காமல், அபாயகரமாக பேருந்து ஓட்டப்பட்டுள்ளது.

கேரளாவில் வெள்ளத்தால், முழுவதுமாக மூழ்கிய ஆற்றுப் பாலத்தை அபாயகரமாக கடந்த தனியார் பேருந்து, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியதை தொடர்ந்து கேரளா போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கேரள மாநிலத்தில் தற்போது கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் பிடிப்பு பகுதிகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் பாலக்காடு, மண்ணார்காடு பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலம் ஒன்று தண்ணீரால் முழுவதுமாக முழ்கடிக்கப்பட்டு  இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் பாலம் வழியாக மண்ணார்காடு நோக்கி வந்த தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்துக்குள் இருக்கும் பயணிகளின் உயிரையும்  பொருட்படுத்தாமல், பேருந்தில் இருந்த பயணிகளின் பேச்சையும் கேட்காமல், அபாயகரமாக அந்த ஆற்று பாலத்தில் பேருந்தை ஓட்டிக்  கடந்துள்ளார்.

அபாயகரமான பேருந்து பயணம்


Must Read : கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து ஃபேன், பெஞ்ச், நாற்காலிகளை திருடிச் சென்ற போராட்டக்காரர்கள்..

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதைத் தொடர்ந்து மண்ணார்காடு போக்குவரத்துக் காவல் துறையினர் பேருந்து ஓட்டுனர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக வழக்கும் பதிவு செய்து பேருந்துக்கு அபராதம் விதித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Bus, Flood, Kerala, Rain

அடுத்த செய்தி