உ.பியில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை? மறுக்கும் காவல்துறை

4 பேர் என்னைக் கடத்திச் சென்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கினர். நான், சொல்ல மறுத்த நிலையில் மண்ணென்ணெய் ஊற்றி என்னை கொளுத்திவிட்டனர்

news18
Updated: July 31, 2019, 7:28 PM IST
உ.பியில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை? மறுக்கும் காவல்துறை
மாதிரிப் படம்
news18
Updated: July 31, 2019, 7:28 PM IST
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த 15 வயது இஸ்லாமிய சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து கொளுத்தியதில் அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான். ஆனால், காவல்துறையினர் அதனை மறுத்துள்ளனர்.

நாடு முழுவதும் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்த ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது என்று இந்திய மிக முக்கிய ஆளுமைகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் என்ற 15 வயது சிறுவன் 60% தீக்காயங்களுடன் கபீர் சவுரா மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சிறுவன் இறப்பதற்கு முன்னர் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், ‘4 பேர் என்னைக் கடத்திச் சென்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கினர். நான், சொல்ல மறுத்த நிலையில் மண்ணென்ணெய் ஊற்றி என்னை கொளுத்திவிட்டனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், சிறுவன் உயிரிழந்ததால் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து தெரிவித்த அம்மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங், ‘உயிரிழந்த சிறுவன் இரண்டு விதமாக பேசியுள்ளார். முதலில், மஹாராஜ்பூர் கிராமத்தில் தன்னைக் கடத்திச் சென்று அடித்து ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தீவைத்ததாக கூறியுள்ளார்.

அதன்பிறகு, ஹடீஜா கிராமத்தில் 4 பேர் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். அதைப் பார்க்கும்போது, யாரோ சொல்லிக் கொடுத்து அந்தச் சிறுவன் கூறுவதுபோல உள்ளது. அந்தச் சிறுவன் கூறிய இடத்தின் சி.சி.டி.வி காட்சிகளைச் சோதனை செய்தபோது, அதில் அந்தச் சிறுவன் இல்லை. இதைப் பார்த்த சாட்சி(eye witness) அந்தச் சிறுவன் தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டான் என்று தெரிவித்துள்ளது’ என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

Also see:

Loading...

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...