மும்பையில் தோழிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வைத்து அவளை பலமுறை வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் 17 வயது சிறுவன் தன் தோழியின் பிறந்தநாள் விழாவில் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான். அப்போது அவர்கள் இருவரும் முத்தம் கொடுப்பதை அந்த சிறுவன் செல்பி எடுத்து வைத்திருக்கிறான்.
அந்த புகைப்படத்தை காட்டி, அதை வெளியிடுவேன் என மிரட்டி, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 26ஆம் தேதி வரை பல முறை அவளை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான். அந்த சிறுமியும் இதுகுறித்து வெளியில் சொல்ல முடியாமல் அவனிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க : இங்கிலிஷ் கோச்சிங்.. 42 வயது ஆசிரியர் மீது காதலில் விழுந்த 20 வயது மாணவி..!
இதையடுத்து அந்த சிறுமியை ஒரு நாள் வெளியில் அழைத்த போது அவள் வராததால், அந்த சிறுமியின் கல்லூரிக்கே சென்று அவளை தாக்கி இருக்கிறார் அந்த சிறுவன். இதை அறிந்த அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் அந்த சிறுமியின் பெற்றொரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு பெற்றோர் கேட்ட பிறகு அந்த சிறுமிக்கு நடந்த சோதனைகள் அனைத்தையும் அவள் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அந்த சிறுவனை மும்பை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுவன் மீது போக்சோ உட்பட பல வழக்குகள் பதியப்பட்டன. இதை தொடர்ந்து அந்த சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வழக்கை நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த சிறுவனும், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும் 18 வயதிற்கு குறைவானவர்கள் என்பதால் அவர்களின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boy Friend, Child Abuse, Mumbai, Pocso, POCSO case, Rape case, Sexual abuse, Sexual harassment