Home /News /national /

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை தடுக்க காங்கிரஸ் செய்த தந்திரம்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை தடுக்க காங்கிரஸ் செய்த தந்திரம்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்களின் மலிவான செயல்களால், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்காதவர்கள் என்றும் வெளிப்படையாகவே காட்டியுள்ளது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சாடியுள்ளார்.

பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்களின் மலிவான செயல்களால், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்காதவர்கள் என்றும் வெளிப்படையாகவே காட்டியுள்ளது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சாடியுள்ளார்.

பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்களின் மலிவான செயல்களால், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்காதவர்கள் என்றும் வெளிப்படையாகவே காட்டியுள்ளது என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சாடியுள்ளார்.

  பஞ்சாப் மாநிலத்தில் சில நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை அங்கு சென்றார். முதலில் பதிண்டாவுக்கு வந்த மோடி, அங்கிருந்து தேசிய தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள ஹுசைனிவாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது, வெளிச்சம் குறைவு, தொடர் மழை காரணமாக, சாலைப் பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டரில் மோடி செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. வானிலை சரியாக அமையாத காரணத்தால் சாலை மார்க்கமாக மோடி செல்வதற்கு பயணத்திட்டம் மாற்றப்பட்டது. அதற்கு முன்பாக, பஞ்சாப் டிஜிபியிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி செல்லக் கூடிய வழியில் மிகச்சரியாக உள்ளதென உறுதி செய்யப்பட்டிருந்தது.

  இந்நிலையில் மோடி செல்லும் வழியில், விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

  இதற்கு பொறுப்பேற்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

  இந்நிலையில், இதுகுறித்து பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, பிரதமர் மோடி, பகத்சிங் மற்றும் பிற தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், முக்கிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று அவர்கள் கவலைப்படவில்லை. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்களின் மலிவான செயல்களால், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்காதவர்கள் என்றும் வெளிப்படையாகவே காட்டியுள்ளது.

  Also read:  வாக்குறுதியை நிறைவேற்றாத எம்.எல்.ஏவுக்கு ஷாக் கொடுத்த தொகுதி மக்கள்..

  பஞ்சாபில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடுக்க முடிந்தவரை அனைத்து தந்திரங்களையும் செய்தது. மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக உத்தரவாதம் அளித்தனர்.

  அதே நேரத்தில் பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமரைப் பொறுத்த வரையில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாடாகும். பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்குமாறு மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. காவல்துறையினரின் மித மிஞ்சிய செயல்பாடுகள் மற்றும் போராட்டக்காரர்களுடன் ஒத்துழைத்ததால் ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

  அனைத்தையும் விட நிலைமையை மோசமாக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் சன்னி தொலைபேசியில் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார். பஞ்சாபில் காங்கிரஸ் அரசு கையாளும் உத்திகள் ஜனநாயகக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எவரையும் வேதனைப்படுத்தும்.

  பஞ்சாப் மாநிலத்துக்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு பிரதமரின் வருகை சீர்குலைத்தது வருத்தமளிக்கிறது. ஆனால் இதுபோன்ற மலிவான மனநிலை பஞ்சாபின் முன்னேற்றத்தைத் தடுக்காது, பஞ்சாபின் வளர்ச்சிக்கான முயற்சியைத் தொடருவோம். இவ்வாறு ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

  இதையும் படிங்க : 11 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட முதியவர் - எப்படி சாத்தியம்?
  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, JP Nadda, PM Modi

  அடுத்த செய்தி