• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒரு தலைக் காதல்... பெண்ணைக் காரில் கடத்தி தாலி கட்டிய நபர்...!

ஒரு தலைக் காதல்... பெண்ணைக் காரில் கடத்தி தாலி கட்டிய நபர்...!

காரில் பெண்ணுக்கு கட்டாய தாலி கட்டும் நபர்

காரில் பெண்ணுக்கு கட்டாய தாலி கட்டும் நபர்

  • Last Updated :
  • Share this:
    பெங்களூருவில் பெண்ணை காரில் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ய நினைத்த 30-வயது இளைஞர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ளது அர்சிகேரே கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மனு (வயது 30) . இவரது உறவினர் மகள் ரம்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) , மனு ரம்யாவை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை தன் காதலை வெளிப்படுத்தியும் இதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    இதனிடையே ரம்யாவின் வீட்டில் சென்று பெண் கேட்டுள்ளார். இதற்கு ரம்யாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவிக்க ரம்யாவை கடத்தி தாலி கட்டி விட முடிவு செய்து காரில் அவரை கடத்திச் சென்றுள்ளார்.

    இதற்கிடையில் பணி முடிந்து மகள் வீடு திரும்பவில்லை என்பதால் பதறிய பெற்றோர்கள் மகளை காணாமல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    ரம்யாவிற்கு தாலி கட்ட முயன்ற போது ரம்யா தன்னை காப்பாற்றும் படி கத்தியதால் காரில் பாடலின் ஒலியை மிகை படுத்தி வைத்துள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக ரம்யாவிற்கு தாலி கட்டி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

    வீடியோ வைரலான நிலையில் கர்நாடக காவல் துறையினர் மனு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: