Home /News /national /

கேரளாவில் தெரு நாய் கடித்து 12 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் பலி

கேரளாவில் தெரு நாய் கடித்து 12 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் பலி

கேரளாவில் வெறிநாய்க்கடியால் உயிரிழந்த 12 வயது குழந்தை

கேரளாவில் வெறிநாய்க்கடியால் உயிரிழந்த 12 வயது குழந்தை

Kerala | கேரளாவில் தெரு நாய் கடித்து 12 வயது மாணவி அபிராமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மயிலபுறம் பகுதியை சேர்ந்த  12 வயதுடைய அபிராமி  கடந்த வாரம் பால் வாங்க கடைக்கு செல்லும்போது தெருவில் இருந்த தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் அபிராமியின் கை, கால் ,  கண் பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் அபிராமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வெறிநாய் கடிக்கான மூன்று தடுப்பூசிகள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை அபிராமிக்கு உடல் நிலை திடீரென மிகவும் மோசமாகியுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Also see... நாமக்கல்லில் குழந்தைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி உயிரிழந்துள்ளார். நடத்தப்பட்ட பிரத பரிசோதனையில் மூளையில் பரவிய வைரஸ்களால் சிறுமி உயிரிழந்து உள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய் கடித்து 12 வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Child, Death, Dog, Kerala

அடுத்த செய்தி