முகப்பு /செய்தி /இந்தியா / தள்ளாத வயதிலும் ஐயப்பனை தரிசிக்க வந்த 99 வயது மூதாட்டி.. வியந்து போன பக்தர்கள்

தள்ளாத வயதிலும் ஐயப்பனை தரிசிக்க வந்த 99 வயது மூதாட்டி.. வியந்து போன பக்தர்கள்

99 வயது மூதாட்டி

99 வயது மூதாட்டி

sabarimalai | 26 வது ஆண்டாக சபரிமலைக்கு வந்த தேவு என்ற மூதாட்டி இம்முறை உறவினர்கள் உதவியோடு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை சன்னிதானத்தில் நேற்று அதிகாலையில் தரிசனத்திற்கு வந்த 99 வயது மூதாட்டி சாமி தரிசனம் செய்ய வந்தது ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியை சேர்ந்த தேவு என்ற 99 வயது மூதாட்டி நேற்று சபரிமலையில் அதிகாலையில் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர். இது அங்கு நின்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் போலீசார் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.  26வது ஆண்டாக சபரிமலைக்கு வந்த தேவு என்ற மூதாட்டி இம்முறை உறவினர்கள் உதவியோடு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்துள்ளார்.

வயது முதிர்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் சவாலை எதிர் கொண்டு 99 வயதிலும் சன்னிதானம் வந்த மூதாட்டி சாமிதரிசனம் செய்ததை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் கூட்டம் வியந்து போனது என்றே சொல்லலாம். மேலும் அங்கிருந்த பக்தர்களில் சிலர் மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்தும் சென்றனர்.

இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

அதிகாலை 4 மணி முதல் மதியம் 1.30 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30  மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kerala, Sabarimalai, Sabarimalai Ayyappan temple