அசாம் தேர்தலில் குளறுபடி: பூத்தில் மொத்த வாக்காளர்கள் 90; பதிவான வாக்குகள் 181

அசாம் சட்டமன்ற தேர்தல்

அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டறியப்பட்டதால் அந்த குறிப்பிட்ட பூத்களில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது

  • Share this:
அசாம் சட்டமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களை விட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டதால் 6 தேர்தல் அலுவலர்களை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அசாமில் 3 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

இதனிடையே அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள Haflong தொகுதியில் 2ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது ஒரு பூத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களைவிட அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூத்தில் மொத்த வாக்காளர்கள் வெறும் 90 பேர் மட்டுமே, ஆனால் அந்த பூத்தில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தது.

இதனை வாக்கு மையத்தின் தலைமை அதிகாரி மற்றும் முதல் வாக்கு அதிகாரி ஆகியோர் ஒத்துக்கொண்டனர். முக்கிய வாக்கு மையத்துக்கு பதிலாக துணை வாக்கு மையத்தில் தாங்கள் வாக்களிக்க அனுமதித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குளறுபடியை கண்டறிந்த தேர்தல் ஆணையம் Seikhosiem Lhangum (Sector Officer), Prahlad Ch Roy (Presiding Officer), Parameswar Charangsa (1st Polling Officer), Swaraj Kanti Das (2nd Polling Officer) மற்றும் Lalzamlo Thiek (3rd Polling Officer) ஆகிய 6 அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. மேலும் அந்த பூத்தில் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டறியப்பட்டதால் அந்த குறிப்பிட்ட பூத்களில் மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பூத்தில் மறு வாக்குப்பதிவுக்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: