மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசின் நிலை என்ன? அமைச்சர் விளக்கம்

news18
Updated: July 27, 2019, 10:05 AM IST
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசின் நிலை என்ன? அமைச்சர் விளக்கம்
நாடாளுமன்றம்
news18
Updated: July 27, 2019, 10:05 AM IST
நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மரண தண்டனை ஒழிப்பு தொடர்பான தனிநபர் மசோதா மீது பேசிய உள்துறை இணையமைச்சர், 90 சதவிகித மாநிலங்கள் மரண தண்டனைக்கு ஆதரவாக உள்ளதாக கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மரண தண்டனையை ஒழிப்பதில் அரசின் நிலைப்பாடு என்ற என்பது குறித்து தனிநபர் மசோதா மூலம் விளக்கம் கோரப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய, உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, ”மரண தண்டனையை ஒழிக்கும் கோரிக்கை தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகிறது. ஆனால், இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை.

90 சதவீத மாநிலங்கள் மரண தண்டனை அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஒரே ஒரு மாநிலம்தான் வேண்டாம் என்கிறது. விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். அதன்பின் ஆளுநரிடம் கருணை மனு கொடுக்கலாம். அவர் நிராகரித்தால் உச்சநீதிமன்றத்தை நாடலாம். அதன்பின் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பலாம். இதனால் மரண தண்டனையில் இருந்து அப்பாவிகள் தப்புவதற்கு பல முயற்சிகள் உள்ளன.


மரண தண்டனை விதிவிலக்கான மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் வழங்கப்படுகிறது” என்று கூறினார். மசோதாவின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கருத்து கூறினர்.

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...