ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் 2024-க்குள் 90 கார்பன் நியூட்ரல் விமான நிலையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

இந்தியாவில் 2024-க்குள் 90 கார்பன் நியூட்ரல் விமான நிலையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை 200 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  இந்தியாவில் வருகின்ற 2024 க்குள் 90 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் கார்பன் நியூட்ரல் ஆக அமைக்கப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 220 ஆக உயரக்கூடும் என விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் சமீப காலங்களாக விமான போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகளின் தேவைகளை அறிந்து மத்திய அரசும் விமானநிலையங்களில் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

  இந்நிலையில் தான் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரான ஜோதிராதித்யா சிந்தியா, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்படும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 141 விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  மேலும் கொச்சி மற்றும் டெல்லி விமான நிலையங்கள் கார்பன் நியூட்ரல் ஆக இருப்பது போன்று 2024 க்குள் 90 விமான நிலையங்களில் இதே நடைமுறை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  பொதுவாக பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவும், உறிஞ்சப்படும் கார்பனின் அளவும் சமநிலையில் இருப்பதே கார்பன் நியூட்ரல் எனப்படுகிறது. எனவே புதிதாக கட்டப்படும் விமான முனையக் கட்டிடத்தில் வெப்பம் மற்றும் குளிரூட்டும் நோக்கங்களுக்காக சோலார் பிவி ஆலையுடன் கலப்பினத்தில் புவி வெப்ப அமைப்பு வழங்கப்படும்.

  இந்த அமைப்பு காற்று மற்றும் தரைக்கு இடையில் வெப்பத்தை பரிமாறிக் கொள்வதன் மூலம் செயல்படும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பிருக்காது எனவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

  இதோடு அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் எனவும், உள்நாட்டு விமான நிலையங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

  2026 ஆம் ஆண்டுகள் சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான விமான நிலையங்கள் உள்பட மொத்தம் 220 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா தலைசிறந்து விளங்கும் எனவும் கூறியுள்ளார்.

  குறிப்பாக உள்நாட்டு விமான நிலையங்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளது என தெரிவித்த அவர், எந்த இடங்களில் விமான நிலையங்கள் அதிகமாக உள்ளதோ? அங்கெல்லாம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

  Read More: சுற்றுச்சூழல் சீர்கேடு : பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

  இந்தியாவைப் பொறுத்தவரை 200 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை உள்ளது. எனவே இதனை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Airport, Transport