முகப்பு /செய்தி /இந்தியா / சாக்லேட் வாங்கித் தருவதாக 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..

சாக்லேட் வாங்கித் தருவதாக 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உறவினர் வீட்டை உபி அரசு புல்டோசர் வைத்து இடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உறவினர் வீட்டை அரசு புல்டோசர் வைத்து இடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் உள்ள கமாசின் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான பிரதீப் குமார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவுக்காரின் மகளான 9 வயது சிறுமியை பிப்ரவரி 10ஆம் தேதி அன்று மதியம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அங்குள்ள மாட்டு பண்ணை பகுதிக்கு தனியாக அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். சிறுமியின் தாயார் வயல் வேலையை முடித்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பிய நிலையில், அப்போது தனது நேர்ந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் அபினந்தன் பிரதீப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரின் வீட்டையும் காவல்துறையினர் புல்டோசர் வைத்து இடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.அந்த நபருக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என எஸ்பி அபிநந்தன் உறுதி அளித்துள்ளார்.

First published:

Tags: Cyber crime, Minor girl, Rape, Uttar pradesh