ஹோம் /நியூஸ் /இந்தியா /

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வீடியோ எடுத்து மிரட்டிய இரு சிறுவர்களுக்கு வலைவீச்சு!

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வீடியோ எடுத்து மிரட்டிய இரு சிறுவர்களுக்கு வலைவீச்சு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொடூரத்தை சம்பவத்தை வீடியோ பதிவு செய்து வைத்த இரு சிறுவர்களும் அதை வெளியே கூறினால் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என சிறுமியை மிரட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

9 வயது சிறுமியை பக்கத்து வீட்டு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு ஆளாக்கிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் வசிக்கும் 9 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இவர் தனியாக இருப்பதை அறிந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவர்களை எதிர்த்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியை இரு சிறுவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், அந்த கொடூரத்தை வீடியோ பதிவு செய்து வைத்து, சம்பவத்தை வெளியே கூறினால் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என சிறுமியை மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில்,வழக்கு பதிவு செய்த காவல்துறை தலை சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பாணியில் இளைஞர் கழுத்து அறுத்து கொலை.. குடியரசு தின விழாவிற்கு முன் டெல்லியில் பகீர் சம்பவம்

இதற்கிடையே புகாருக்கு ஆளான இரு சிறுவர்களும் வீட்டைவிட்டு தப்பி தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக மதுரா காவல் ஆய்வாளர் சோடே லால் தெரிவித்துள்ளார். இத்தகைய கொடூர செயலை இரு சிறுவர்கள் செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Gang rape, Minor girl