வேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது

வேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 21, 2018, 7:48 AM IST
  • Share this:
ஒடிசா மாநிலத்தில் வேண்டுதல் நிறைவேற கடவுளுக்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்ததாக சிறுவனின் மாமா மற்றும் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சுந்திமுந்தா கிராமத்தை சேர்ந்த ஞானஷ்யாம் ராணா என்ற 9 வயது சிறுவன் கடந்த 13-ம் தேதி மாயமானான். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர், 18-ம் தேதி அங்குள்ள ஆற்றின் கரையில் தலையில்லாமல் புதைக்கப்பட்ட சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியிலேயே சிறுவனின் வெட்டப்பட்ட தலையும் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து, சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், அவனது மாமா மற்றும் சகோதரன் மீது சந்தேகம் கொண்டு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடவுளிடம் வேண்டியது நிறைவேற சிறுவனை நரபலி கொடுப்பதற்காக கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.


சிறுவனை கொல்ல பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Also see..

First published: October 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading