சொற்களை எண்ணும் ‘கவுண்டிங் பேனாவை’ உருவாக்கிய 3ம் வகுப்பு மாணவர்

news18
Updated: April 16, 2018, 2:16 PM IST
சொற்களை எண்ணும் ‘கவுண்டிங் பேனாவை’ உருவாக்கிய 3ம் வகுப்பு மாணவர்
குடியரசு தலைவர் கொடுத்த பரிசு மற்றும் தனது கவுண்டிங் பேனாவிஉடன் முசாஃபர்
news18
Updated: April 16, 2018, 2:16 PM IST
காஷ்மீரில் 9 வயது சிறுவன் முசாஃபர் அகமது கான் சொற்களை எண்ணும்  ‘கவுண்டிங் பேனாவை’ உருவாக்கியுள்ளார்.

காஷ்மீர் குரேஷ் பகுதியை சேர்ந்தவர் முசாஃபர் அகமது கான், 3 வது வகுப்பு மாணவர். சமீபத்தில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றார். அங்கு அவர் சிறுவனின் கண்டுபிடிப்புக்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரைப் பாராட்டி பரிசளித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து சிறுவனிடம் கேட்ட போது, தேர்வுகளில் குறைவான வார்த்தைகளை எழுதுவதால் தன்னால் குறைந்த மதிப்பெண்ணையே பெற முடிந்ததாகவும்,  இதனால் சொற்களை எண்ணுவதற்கு ‘கவுண்டிங் பேனா’ என ஒன்று இருந்தால் தேர்வில் தனியாக சொற்களை எண்ணிக் கொண்டிருக்கும் வேலை இருக்காது என நினைத்துள்ளார். அதன்படி பலரிடமும் தகவல்களை பெற்று இந்த புதிய வகை பேனாவை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேனாவில் இருக்கும் சிறிய மானிட்டரில் எத்தனை வார்த்தைகளை எழுதியுள்ளோம் என்பது தெரியும் அல்லது செல்ஃபோனுடன் இணைத்து மெசேஜ் மூலமும் சொற்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம்  எனவும் அவர்  கூறியுள்ளார்.

ஒரு அறிவியலாளர் ஆவதே தனது குறிக்கோள் எனவும் முசாஃபர் அகமது கான்தெரிவித்துள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்