பியானோ கருவியை இசைத்தபடி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 9 வயது சிறுமி

பியானோ கருவியை இசைத்தபடி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 9 வயது சிறுமி

பியானோ கருவியை இசைத்தபடி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 9 வயது சிறுமி

பியானோ கருவியை இசைத்தபடி 9 வயது சிறுமி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

  • Share this:
சிலர் மிகவும் கடினமான காலங்களில்கூட தங்கள் மனவலிமையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் 9 வயது சிறுமி தனது மூளையில் இருக்கும் ஒரு கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, பியானோவை வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரைச் சேர்ந்தவர் சவுமியா. இவர் சமீபத்தில் மூளைக் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பி.எம்.ஆர் மருத்துவமனைகளில் தனது மூளை அறுவை சிகிச்சையின்போது சிறுமி பியானோ வாசித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள் "அவேக் கிரானியோட்டமி" (Awake Craniotomy) முறையைப் பயன்படுத்தி சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறிய அந்த செய்தி அறிக்கையில், சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உடலின் ஒரு பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சவுமியா சிறிது நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர் கடந்த டிசம்பர் 13ம் தேதி, சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சிறுமி தனது அறுவை சிகிச்சையின்போது பியானோ வாசித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறுமி, 6 மணி நேரம் தொடர்ந்த அறுவை சிகிச்சையின்போது பியானோவைத் தவிர வீடியோ கேம்களையும் விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

Also read: கார் உற்பத்தியில் உலகளவில் 5வது இடத்தைப் பிடித்த இந்தியா.. முதலிடத்தில் சீனா

இதுகுறித்து பி.ஐ.எம்.ஆர் மருத்துவமனையின் ஆலோசகர், நரம்பியல் மருத்துவர் அபிஷேக் சவுகான் கூறியதாவது, நோயாளி விழிப்புடன் இருக்கும் அறுவைச் சிகிச்சை நடத்தியது இது ஏழாவது முறையாகும் என்று கூறினார். சவுமியா போலவே இதற்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிலர் இதுபோன்று செய்ததாக கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சவுமியா மிகக் கடுமையாக அவதிக்கு உள்ளாகி வந்ததாக மருத்துவர் தெரிவித்தார். அவளுக்கு மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும், மருந்துகள் அவளுடைய பிரச்னையைத் தீர்க்க தவறிவிட்டன என்பதால் அறுவை சிகிச்சை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவக்குழு ஒரு வலுவான தொழில் வல்லுநர்களைக் கொண்டிருப்பதாகவும், இது அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக ஆக்கியதாகவும் மருத்துவர் மேலும் கூறினார். இந்த நிலையில், தனது மகளுக்கு 2வது வாழ்க்கை கொடுத்த மருத்துவர்களுக்கு சவுமியாவின் பெற்றோர் நன்றியைத் தெரிவித்தனர். சவுமியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட அவேக் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை, மூளைக் கட்டிகள் அல்லது கால்-கை வலிப்பு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.மேலும் அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் செயல்பாட்டை கண்காணிக்க மருத்துவர்கள் சில கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களை விழிப்புடன் வைத்திருக்க அறுவை சிகிச்சையின்போது சில செயல்களைச் செய்யுமாறு நோயாளிகளிடம் கேட்கப்படுமாம். இந்த ஆண்டு ஜூன் மாதம், 60 வயதான இத்தாலிய பெண்ணுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தபோது 90 ஆலிவ்களை பெட்டியில் அவர் அடைத்துவைத்துள்ளார். இத்தாலியின் அன்கோனாவில் உள்ள ரியூனிட்டி மருத்துவமனையில் அவரது மூளையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நரம்பியல் அறுவை சிகிச்சை செய்தபோது அவர் இந்தச் செயலைச் செய்திருக்கிறார்.

ஜனவரி மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 53 வயதான ஒரு பெண் வயலின் வாசித்தபோது, மருத்துவர்கள் அவரது மூளையின் வலது முன் பகுதியிலிருந்து ஒரு கட்டியை அகற்றியிருக்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: