ஹோம் /நியூஸ் /இந்தியா /

பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி மர்ம மரணம்.. ரூ.4 லட்சம் பேரம் பேசியதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி மர்ம மரணம்.. ரூ.4 லட்சம் பேரம் பேசியதாக பெற்றோர் குற்றச்சாட்டு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாங்கள் ரூ.4 லட்சம் தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிது படுத்த வேண்டாம் பள்ளி நிர்வாகம் தங்களிடம் பேரம் பேசியதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  கர்நாடகா மாநிலத்தில் 4ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள கங்கமன்பூண்டி என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நிஷ்ஹிதா என்ற 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

  இந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை மத்திய வேளையில் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில், மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அந்த மாணவியின் உடலின் வெளிப்புறத்தில் எந்த காயங்களும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தந்தை நாகேந்திரா உறவினர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். தனது மகளின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பள்ளியில் மாணவிக்கு தண்டனை வழங்கப்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் எனப் புகார் தெரிவித்துள்ளனர். நாங்கள் ரூ.4 லட்சம் தருகிறோம், இந்த விவகாரத்தைப் பெரிது படுத்த வேண்டாம் பள்ளி நிர்வாகம் தங்களிடம் பேரம் பேசியதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

  இதையும் படிங்க: கொசுக்களை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல தாதா.. வழக்கு விசாரணையில் பரபரப்பு!

  இந்நிலையில், பெங்களூரு காவல்துறை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பள்ளிக்குச் சென்று சிசிடிவிகளை ஆய்வு செய்யவுள்ளதாகவும் விரைவில் உண்மையை வெளிகொண்டு வருவோம் எனவும் பெங்களூரு டிசிபி விநாயக் பாடீல் தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bengaluru, Death, School