Himachal Landslide | “இயற்கையை நேசித்தவர் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த பரிதாபம்”- 9 பேரின் உயிரை பறித்த திடீர் நிலச்சரிவு!

புகைப்படம் எடுப்பது, பயணம் செய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது போன்றவற்றை விரும்புவதாக அவரது தனிப்பட்ட வலைத்தளம் மூலம் தெரிய வருகிறது.

புகைப்படம் எடுப்பது, பயணம் செய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது போன்றவற்றை விரும்புவதாக அவரது தனிப்பட்ட வலைத்தளம் மூலம் தெரிய வருகிறது.

  • Share this:
ஹிமாச்சல பிரதேசம்: கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அப்பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் கின்னார் மாவட்டத்தின் சங்லா-சிட்குல் சாலை அருகே நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, அப்பகுதி வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் டெம்போ வாகனத்தின் மீது பெரிய கற்பாறைகள் விழுந்ததில், சுற்றுலாப் பயணிகள் 8 பேர் மற்றும் 34 வயதான தீபா சர்மா என்ற பெண் மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, இந்தோ - திபெத் எல்லை போலீஸார் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 25 மதியம் 12.59 மணிக்கு, ஜெய்ப்பூரைச் சேர்ந்த 34 வயதான தீபா சர்மா என்ற பெண் மருத்துவர் ஒருவர், தான் சுற்றுலா சென்ற இடத்தில் நின்றவாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார். அதில், “இந்தியாவின் கடைக்கோடி எல்லையில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த எல்லையைத் தாண்டி சுமார் 80 கிலோ மீட்டரில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திபெத் எல்லை உள்ளது,”என்று கூறியிருந்தார். ஆனால், அப்போது தீபாவிற்கு தெரியாது இன்னும் 30 நிமிடங்களுக்குள் அவரின் உயிர் இயற்கை மடியிலேயே பிரியப்போகிறது என்று.பின், சிறிது நேரத்தில் (மதியம் 1.25 மணிக்கு) கடும் மழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் கின்னார் மாவட்டத்தில் சிட்குலாவிலிருந்து சங்லா வரை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு டெம்போ வாகனம் மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி வந்தது.

Also Read | திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

அண்மையில் பெய்த மழையால் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாங்லா-சிட்குல் சாலையில் பாஸ்டேரி என்ற கிராமத்தை கடுமையாக தாக்கியது. இதில் ஒரு பாலம் முழுமையாக இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்தன. வீடியோவில், கற்பாறைகள் கீழ்நோக்கி உருண்டு செல்வதைக் காணலாம்.தீபா சர்மா ஒரு ஆயுர்வேத பயிற்சியாளரும், மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளரும் ஆவார். சமூக வலைதளங்களில் பல மடங்கு பின்தொடர்வோரை வைத்திருப்பவர். புகைப்படம் எடுப்பது, பயணம் செய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது போன்றவற்றை விரும்புவதாக அவரது தனிப்பட்ட வலைத்தளம் மூலம் தெரிய வருகிறது.. நிலச்சரிவில் தனது உயிரை இழப்பதற்கு முந்தைய நாள், "இயற்கை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை" என்ற தலைப்பிட்டு மலைகள் சூழ தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார்.

Imageமேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு உதவ சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். “உரிமைகள் மற்றும் பல்வேறு அரசின் திட்டங்களைப் பற்றி அறியாத பெண்களுக்கு நான் கல்வி கற்பித்தேன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ​​தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஆதரவுடன் உணவு, பெண் சுகாதாரம், மருத்துவ சிகிச்சை மற்றும் அடிப்படை தேவைகள் ஆகியவற்றை பல குடும்பங்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறேன்” என்று அவரது தனிப்பட்ட வலைதளத்தில் தீபா குறிப்பிட்டிருக்கிறார். அவரது இணையதளம் மூலம் பெண்களின் உரிமைகள் மீதான மருத்துவர் தீபாவின் ஆர்வம் நன்கு வெளிப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட மருத்துவர் தீபா சர்மாவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Published by:Archana R
First published: