• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

தங்களிடம் பணம் இல்லை என்றும் விரைவில் செல்போன் வாங்கிக் கொடுக்கிறோம் என்றும் வெங்கடாத்ரியிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்க தாமதித்த காரணத்தால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்திலுள்ள புள்ளையாபள்ளியை சேர்ந்தவர்கள் சீனிவாசலு, மௌனிகா தம்பதியினர். இவர்களது ஒரே மகன் வெங்கடாத்ரி.

சீனிவாசலு பிரகாசம் மாவட்டம், பாமூருவில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வாட்ச்மேனாக வேலை செய்து வருகின்றார். அதே ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் வெங்கடாத்ரி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், தனக்கு செல்போன் வாங்கிக் கொடுக்குமாறு வெங்கடாத்ரி தனது பெற்றோரை கடந்த 2 மாதங்களாக வற்புறுத்தியுள்ளார்.

தங்களிடம் பணம் இல்லை என்றும் விரைவில் செல்போன் வாங்கிக் கொடுக்கிறோம் என்றும் வெங்கடாத்ரியிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று, வெங்கடாத்ரி செல்போன் வாங்கிக் கொடுக்காதது தொடர்பாக தனது பெற்றோரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர்கள் கோபமாக பேசியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வெங்கடாத்ரி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, வெங்கடாத்ரியை அவரது  பெற்றோர் பாமூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தை அடைந்ததால், அதே ஊரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வெங்கடாத்ரி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:DS Gopinath
First published: