காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் பயங்கரவாதிகள் 9 பேரை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்றனர்.
அப்போது, தெற்கு காஷ்மீர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படையினர், அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 4 பேரை சுட்டுக் கொன்றனர். இதனிடையே கெரான் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேரையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பயங்கரவாதிகள் - பாதுகாப்புப்படையினர் இடையிலான இந்த மோதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததாகவும், 2 வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.