Home /News /national /

ஒன்பது செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன! இஸ்ரோ பெருமிதம்

ஒன்பது செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன! இஸ்ரோ பெருமிதம்

பி.எஸ்.எல்.வி

பி.எஸ்.எல்.வி

  • News18
  • Last Updated :
    வணிக ரீதியிலான ஒன்பது செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இதுவாகும். 628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளுடன், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் வணிக ரீதியாக இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.

    ரீசாட் -2, பிஆர்1 செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகள் பூமியை கண்காணிக்கும். பூமியிலில் இருந்த 576 கி.மீ தொலைவில் பி.எஸ்.எல்.வி சி-48 நிலைநிறுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஒன்பது செயற்கைக்கோள்கும் வெற்றிகரமாக அதனுடைய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Satellite

    அடுத்த செய்தி