ஹோம் /நியூஸ் /இந்தியா /

செங்கல் சூளையில் பயங்கர விபத்து... 9 பேர் பலி! - பிரதமர், முதலமைச்சர் இரங்கல்!

செங்கல் சூளையில் பயங்கர விபத்து... 9 பேர் பலி! - பிரதமர், முதலமைச்சர் இரங்கல்!

பீகார் விபத்து

பீகார் விபத்து

தீ வைத்துவிட்டு அதை கவனிக்க அருகில் மக்கள் கூடியுள்ளனர். அப்போது செங்கல் சூளை கனன்று எரிந்து கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த பிரமாண்ட புகை போக்கி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar |

பீகாரில் மாநிலம் கிழக்‍கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ராம்கர்வா பகுதியில் இயங்கி வரும் செங்கல் சூளையில் ஏராளமானோர் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் செங்கலை அடுக்கி தீவைத்துள்ளனர்.

தீ வைத்துவிட்டு அதை கவனிக்க அருகில் மக்கள் கூடியுள்ளனர். அப்போது செங்கல் சூளை கனன்று எரிந்து கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த பிரமாண்ட புகை போக்கி ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.

அதன் அருகில் வேலைபார்த்துக் கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் வலியால் அலறித் துடித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து பீகார் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலவீனமாக இருந்த புகைபோக்கி ஏன் நெருப்பு வைத்தவுடன்  வெடித்தது என்ற நோக்கில் விசாரணை நடைபெறுகிறது.

திருமணம் செய்ய சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொடூரமாக அடித்து உதைத்த வாலிபர் - அதிர்ச்சி வீடியோ

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் இரங்கல் தெரிவித்துள்ளார்

First published:

Tags: Bihar, Fire accident